Skip to main content

மூத்த மொழி தமிழ் என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை... கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழை விட சம்ஸ்கிருதம்தான் தொன்மையான மொழி என அச்சிடப்பட்டிருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது அதிருப்தி கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

minister sengkottiyan interview


இந்நிலையில் தனியார் சேனலுக்கு இதுகுறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  தமிழ் மொழி கிமு 300 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது என புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது தவறானது. பாடப்புத்தகத்தில் தமிழ் பற்றி தவறாக குறிப்பிட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். உலகிலேயே மூத்த மொழி தமிழ் என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை எனவே கண்டிப்பாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்