நேற்று திண்டுக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அடுத்து அ.தி.மு.க ஆட்சிதான்" எனக் கூறியிருந்தார்.
தலைமையின் அனுமதியின்றி முதல்வர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது எனவும், 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் எனத் தலைமை தெரிவிக்கும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கண்டனங்களும் எழுந்தது.
இந்நிலையில் இன்று திண்டுக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சீனிவாசனிடம் இது தொடர்பாக கேள்வி எழுபட்டப்பட்டபோது ''கண்டனம் நியாயமானது. கட்சிக் கட்டுப்பாடு இருக்கும் பொழுது மூத்த உறுப்பினரான நான் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அதனால் இன்று நான் வாய் திறப்பதாக இல்லை'' என நழுவலாக எழுந்து சென்றார்.