தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வகையான சிறப்பு சிகிச்சை பிரிவுகள் துவங்கப்படவுள்ளன.
அவை முதியோர் அறிவுத்திறன் மேம்பாடு மற்றும் தின பராமரிப்பு மையம், ஆதரவற்ற மனநோயர் அவசர சிகிச்சை மற்றும் மீள் வாழ்வு மையம், இளைஞர்களுக்கான இணையதள சார்பு நிலை மீள் வாழ்வு மையம், பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்திற்கான சிறப்பு ஆலோசனை மற்றும் பச்சிளங் குழந்தைகள் செவித்திறன் கண்டறிதல் ஆகியவையாகும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வழிகாட்டுதல்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி மற்றும் மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராயண பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ராதாகிருஷ்ணன் பயனாளிகளுடன் கேரம் விளையாடினார்கள்.