





கரோனா தொடர்பான நடத்தை முறைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றைப் பொதுமக்களிடையே ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் 2021 ஜூலை 2 முதல் ஜூலை 5 வரை (காலை 7 மணிமுதல் மாலை 3 மணிவரை) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கரோனா தடுப்பூசியை அதிகரிப்பதற்கான முக்கிய விபரங்கள் மற்றும் தகவல்களுடன் பொதுமக்களைச் சென்றடையும்.
மேலும், கரோனா தொடர்பான நடத்தைகளைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் அவர்களைத் தூண்டுவது காலத்தின் தேவை. பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் இயக்குநரகம், பத்திரிகை தகவல் பணியகம், உலக சுகாதார அமைப்பு (WHO), யுனிசெஃப் ஆகியவற்றுடன் இணைந்து சந்தை மற்றும் கிராமப் பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
முகக்கவசம் அணிவது, சோப்பு பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் அல்லது சானிட்டைசரைப் பயன்படுத்துதல், நெரிசலான இடங்களைத் தவிர்ப்பதன் மூலம் உடல் ரீதியான தூரத்தைப் பராமரித்தல் உள்ளிட கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படும். இதனை இன்று (02.07.2021) காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் சந்தை பகுதியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.