Skip to main content

பேனரில் எழுத்துப்பிழை; மேடையைத் தவிர்த்த அமைச்சர் கே.என். நேரு

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

Minister K.N. Nehru avoided the stage

 

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள மலைக்கோட்டை பகுதியில் தமிழக அரசு சார்பாக அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு, தீரன் சின்னமலை உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். தொடர்ந்து சங்ககிரி மற்றும் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

 

ஆத்தூர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “2006 ஆம் ஆண்டு நான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தேன். அப்பொழுது ஒரு நாளைக்கு 5,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இன்றைக்கு ஒரு நாளைக்கு 8,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. வாகனங்கள் பெருகிக்கொண்டே போகிறது. சாலை எவ்வளவு அகலப்படுத்தினாலும் போக்குவரத்தை தீர்க்க முடியவில்லை. எனவே சைக்கிளில் வரும் மாணவ மாணவிகள் ரொம்ப ஜாக்கிரதையாக பள்ளி வந்து சேர வேண்டும்” என்றார்.

 

மேடையில் 'பள்ளிக் கல்வித்துறை' என்பதற்குப் பதிலாக 'பள்ளிக் கல்லித்துறை' என அச்சிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த அமைச்சர் கே.என். நேரு மேடைக்குச் செல்லாமல் கீழே இறங்கி மாணவர்கள், ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்