Skip to main content

"துரைமுருகனுக்கு தலைவர் பதவியை ஸ்டாலின் விட்டுத் தருவாரா?" - ஜெயகுமார் கேள்வி

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்" என்றார். 

 

minister-jayakumar about duraimurugan and  Stalin

 

 

முதல்வரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக பொருளாளர் துரைமுருகன், "அதிமுகவில் அனைவருமே முதலமைச்சர்கள் தான் என்று சொன்ன எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுப்பாரா" என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள நேதாஜினின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயகுமார், "திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு திமுக தலைவர் பதவியை மு.க. ஸ்டாலின் விட்டுத் தருவாரா" என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.   

சார்ந்த செய்திகள்