ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவால் ஆத்தூர் தொகுதியில் கிளைக்கழகம் முதல் ஒன்றிய கழகம் வரை உள்ள திமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமைச்சரின் உத்தரவுப்படி மகளிர் அணியினர், பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடுவீடாக சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 45 வருடங்களாக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்த திமுகவினர் முதல் முறையாக கூட்டணி கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்திய கூட்டனியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டனியில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் ஆர்.சச்சிதானந்தத்தின் வெற்றிக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பணி ஆற்றிவருகிறார்.
அத்தோடு, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட அனைவரையும் ஆத்தூர் தொகுதி முழுவதும் திமுக நிர்வாகிகள் பம்பரம்போல் சுழன்று தேர்தல் பணியாற்றி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வைத்துள்ளார்.
இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் உட்பட சில தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள கட்சி பொறுப்பாளர்களிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து சச்சிதானந்தம் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதோடு நமது வெற்றி இந்திய அளவில் பேசப்படுவதாகவும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நீங்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்.