Skip to main content

கரோனா பாதுகாப்பு மையத்தை ஆய்வுசெய்த அமைச்சர்...! 

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

The Minister who inspected the Corona ward centre

 

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் கரோனா தொற்று நோயாளிகளைப் பாதுகாக்கும் வகையில் 400 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை (15.05.2021) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என அங்குள்ள அலுவலர்களிடமும், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  

 

புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எந்தவித தடையும் இல்லாமல் உடனடியாக செய்து தர வேண்டும் என அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், காவல் துறையினர், மருத்துவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்