Skip to main content

நான் மாறி மாறி பேசுவதாக கூறுகிறார் ஸ்டாலின் ஆனால்.... -அமைச்சர் சீனிவாசன் பேச்சு!!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதி முத்துவை வேட்பாளராக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

 

அதன் அடிப்படையில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

seeni

 

இக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ,

 

திண்டுக்கல் மாநகரில் எம்ஜிஆர், ஜெயலலிதா அடுத்தபடியாக 46 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு கூட்டம் டாக்டர் ராம்தாஸ் அய்யாவுக்கு தான் வந்திருக்கிறது.

 

கடந்த சில நாட்களுக்கு இதே இடத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் யார்? என்றும் அவர் மாறி மாறி பேசுவார், தவறாக பேசுவார் என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஆனால் அப்படி நான் என்ன தவறாக பேசினேன் பிரதமர் மோடிக்கு ராகுல் பேரன் போல் இருக்கிறார் என்றுதான் சொன்னேனே தவிர மோடியின் பேரன் ராகுல் என்று சொல்லவில்லை.

 

 

அப்படி மீடியாக்கள் என்னுடைய பேச்சை எடிட்டிங் செய்து போட்டிருக்கிறார்கள் அதுதான் உண்மை. அது போல் அம்மா மருத்துவமனையில் இருந்தபோது மாறி மாறி பேசினோம் என்று சொல்லி இருக்கிறார்கள்  அது உண்மைதான் அதற்காக நானே  வருத்தம் தெரிவித்து இருக்கிறேன். அது நாங்களாக சொல்லவில்லை சசிகலா சொன்னதே நாங்கள் சொன்னோம்.

 

 

அந்த அளவுக்கு நான் ஒரு ஜென்டில்மேன் அப்படி இருக்கும்போது கலைஞரின் மகனான ஸ்டாலின் என்னை பற்றி 15 நிமிடம் பேசி இருக்கிறார். பரவாயில்லை ஸ்டாலின் என் தரத்தை உயர்த்தி இருப்பதை கண்டு பெருமைப்படுகிறேன். பத்து நாட்களுக்கு முன்பே பாமக வேட்பாளரான தம்பி ஜோதி முத்து வெற்றி பெற்றுவிட்டார். இன்னும் சடங்குகள் தான் பாக்கியிருக்கு அது முடிந்தபின் 3 லட்சமோ 3 1/2 லட்சம் வித்தியாசத்திலேயோ வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்