Published on 21/05/2018 | Edited on 21/05/2018
’’1,500 தொடக்க பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்’’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலர் அண்ணாமலை.
அவர் மேலும், ‘’ பள்ளிகளை மூடவில்லை இணைக்கின்றோம் என கூறுகிறார் அமைச்சர். இணைக்கின்றோம் என்ற பெயரில் பள்ளிகளை மூடுகிறார்கள். இது ஆசிரியர் விரோதப்போக்கு என்பதைவிட மக்களின் விரோதப்போக்கு என்பதே சரி.
அரசாணை 101ன் படி பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலரிடம் அதிகாரத்தை குவிப்பது ஊழலுக்கே வழிவகை செய்யும். மாவட்ட அளவில் பணி செய்ய போதிய அதிகாரிகள் இல்லாத நிலை உள்ளது.
மாவட்டத்தின் மொத்த அதிகாரத்தையும் முதன்மை கல்வி செயலருக்கு அளிப்பது தவறு’’என்று தெரிவித்துள்ளார்.