



Published on 12/10/2021 | Edited on 12/10/2021
கரோனா காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் நீண்ட நாட்களாகப் பள்ளிக்குச் செல்லமுடியாமல், ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படித்து வந்தனர். தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள் தொடங்கப்படாததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, வருகிற 1-ந்தேதி (நவம்பர்) முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறை அதிகாரிகளுடன் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.