Skip to main content

தலைக்குப்புற கவிழ்ந்த மினி பேருந்து; ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்

Published on 29/11/2023 | Edited on 08/12/2023
A mini bus carrying Ayyappa devotees met with an accident

தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மினி பேருந்து தலைகுப்புற விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லை சேர்ந்த பக்தர்கள் சிலர் சபரிமலைக்கு மாலை அணிந்து மினி பேருந்து மூலமாக சபரிமலை கோவிலுக்கு சென்று வந்தனர். சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு வரும் வழியில் குற்றாலத்திற்கு சென்று குளித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது சிங்கிலிபட்டி பகுதியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த காரின் மீது ஐயப்ப பக்தர்கள் வந்த மினி பேருந்து மோதியது. இதில் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். காயத்துடன் மீட்கப்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜேசிபி வாகனம் கொண்டுவரப்பட்டு பேருந்து நிறுத்தப்பட்டது. இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்