தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அஇஅதிமுக கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 22.50 பைசா பாலின் விலை ஏற்றம் செய்யப்பட்டது. 2011இல் ஒரு லிட்டர் பாலின் விலை ரூபாய் 22.50 பைசாவாக இருந்தது. 2011ம் ஆண்டு ஒரு லிட்டருக்கு ரூபாய் 6.50 பைசா உயர்த்தப்பட்டது.
2014ஆம் ஆண்டு ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது . 2019 ஆம் ஆண்டு இப்பொழுது ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆகவே கடந்த 8 ஆண்டுகளில் பாலின் விலை ரூபாய் 22.50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் செலவு ஒரு மாட்டிற்கு 10 லிட்டர் பால் கறக்கும் மாடு சுமார் 50 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதற்கு பராமரிப்பு செலவு ஒரு நாள் ஒன்றுக்கு மாட்டுக்கு 40கிலோ உணவு மற்றும் 40 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 5 கிலோ அடர்தீவனம் 170 ரூபாய். + 30கிலோ வைக்கோல் அல்லது பசுந்தீவனம் 300 ரூபாய். + சராசரி மருத்துவ செலவு 20 ரூபாய் (170+300+20=490) 490 ரூபாய் மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு செலவாகிறது.
50ஆயிரம் ரூபாய்க்கு குறைந்தபட்சம் 1 பைசா வீதம் வட்டி மாதம் 500 தர வேண்டி இருந்தால் ஒரு நாளைக்கு 16 ரூபாய் தர வேண்டியுள்ளது. ஆகவே ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 506 ரூபாய் செலவாகிறது. அரசு ஒரு லிட்டருக்கு கொடுக்கும் விலை அதிகபட்ச விலை SNF-8.10 (fat) இருந்தால் ரூபாய் 26.03 பைசா கொடுக்கப்படுகிறது. 10 லிட்டருக்கு (10×26.03) ரூபாய் 260.30 பைசா மட்டுமே கொடுக்கிறார்கள். 506-260.30=245.70.
ஒரு மாட்டுக்கு ரூபாய் 245.70 பைசா நட்டம் ஏற்படுகிறது. இதை சரி செய்வது எப்படி? அரசு தரப்பில் ஏதாவது புள்ளிவிவரம் உண்டா? அதிகப்படியான பால் உற்பத்தி யாளர்களுக்கு பாலின் தரம் SNF-8.0(fat) கிடைக்கிறது. இப்படி இருக்க பால் உற்பத்தி சங்கங்கள் அல்லது சேகரிப்பு மையத்தில் பராமரிப்பு செலவு, மின் கட்டணம், மையத்தில் வேலை செய்யும் வேலை , ஆட்களுக்கு சம்பளம், வாடகை, ஆகியவற்றிற்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 2 ரூபாய் வசூல் செய்து கொள்கிறார்கள். இதில் அதிக நட்டத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் நுகர்வோர் இடத்தில் ஒரு லிட்டர் பால் பல தரத்தில் விற்கப்படுகின்றன (பாக்கெட் நீலநிறம் 43 ரூபாய், பச்சை நிறம் 47 ரூபாய், ஆரஞ்சு நிறம் 51 ரூபாய்) நுகர்வோர் உழைப்பு சுரண்டப்படுகிறது. இதை சரி செய்ய அரசு இடத்தில் விரிவான தகவல் உண்டா?