144 தடையை மீறி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த
அ.தி.மு.க தொண்டரால் பரபரப்பு!
புதுக்கோட்டையில் புதிய மாவட்ட செயலாளர் (அ.தி.மு.க அம்மா அணி) கார்த்திகேயன் இன்று காலை எம்.ஜி.ஆர். அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க அனுமதி கேட்ட நிலையில் எடப்பாடி தரப்பு மா.செ வைரமுத்துவும் சிலைகளுக்கு மாலை போடவும், பேரணி நடத்தவும் அனுமதி கேட்டதால் பிரச்சனைகள் வராமல் தடுக்க போலிசார் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை 144 ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. அதனால் நகர் முழுவதும் பலத்த போலிசார் குவிக்கப்பட்டனர்.
சிலைகளுக்கு மாலை அணிவிக்க திடீரென யாரும் வரலாம் என்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் திடீரென மாலையுடன் வந்த அ.தி.மு.க தொண்டர் சுசீந்திரன் வேகமாக எம்.ஜி.ஆர். சிலையில் மாலை அணிவித்து எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தம் கொடுத்துவிட்டு கீழே இறங்கினார். இவர் அடிக்கடி எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வருபவர்.
ஊராடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் பலத்த போலிஸ் பாதுகாப்பையும் மீறி சுசீந்திரன் மாலை அணிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இரா.பகத்சிங்.