Published on 08/11/2021 | Edited on 08/11/2021
கடந்த சில நாட்களாகவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவந்த நிலையில், தற்போது மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'சேலம் மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் மக்கள் காவேரி ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேட்டூர் அணை நாளை மாலைக்குள் நிரம்பும் என்பதால் எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம். 4 மணி நேரத்திற்கு ஒருமுறை 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் அணை குறித்த நிலவரம் தெரியப்படுத்தப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.