Published on 02/08/2019 | Edited on 02/08/2019
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தொடங்கி பெய்து வருவதால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81 நாட்களுக்கு பிறகு மீண்டும் 50 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் 14 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.18 அடியாக இருந்தது. தற்போது 10 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று காலை சரியாக 7.20 மணிக்கு 50 அடியை தொட்டது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நாளை ஆடி பதினெட்டு என்பதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.