Skip to main content

மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 11.00 மணி வரை நீட்டிப்பு!

Published on 22/08/2021 | Edited on 22/08/2021

 

Metro train SERVICES extension till 11.00 pm!

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (23/08/2021) முதல் காலை 05.30 AM மணியில் இருந்து இரவு 11.00 PM மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (22/08/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் நாளை (23/08/2021) முதல் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ ரயில் சேவைகள் காலை 05.30 AM மணி முதல் இரவு 11.00 PM மணி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன. மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல் மிகு நேரங்களில் காலை 08.00 AM மணி முதல் 11.00 AM மணி வரையிலும், மாலை 05.00 PM மணி முதல் இரவு 08.00 PM மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 

 

மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 07.00 AM மணி முதல் இரவு 10.00 PM மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 

 

மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூபாய் 200 வசூலிக்கப்படுகிறது. 21/06/2021 முதல் 21/08/2021 வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 176 பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூபாய் 35,200 வசூலிக்கப்பட்டுள்ளது. 

 

கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவவறு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்