Published on 04/08/2021 | Edited on 04/08/2021
கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமானதன் காரணமாக தமிழ்நாட்டில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு சற்று தாக்கம் குறைந்ததால் படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால், மக்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்டறிந்து அங்கு கடைகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது. அதன்படி சென்னையில், தி.நகர், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் இன்று (04.08.2021) சாலை மறியலில் ஈடுபட்டனர்.