Published on 15/07/2021 | Edited on 15/07/2021

டெல்லி புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., "மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நீட் தேர்வு, மேகதாது, புதியக் கல்விக் கொள்கையில் மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது. மேகதாது விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் குரலை ஒலிக்கச் செய்ய டெல்லி செல்கிறோம். மேகதாது அணைக்கு எதிராக தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன" என்றார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அனைத்துக் கட்சிகளின் குழு டெல்லியில் நாளை (16/07/2021) பிற்பகல் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைச் சந்திக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.