Skip to main content

மருத்துவ கல்லூரி மாணவர்கள் இரத்தம் வழங்கி போராட்டம்!

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
மருத்துவ கல்லூரி மாணவர்கள் இரத்தம் வழங்கி போராட்டம்!



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரியை எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கட்டண தொகையே வசூலிக்க வேண்டும் என்று கடந்த 30ஆம் தேதி முதல் 9 நாட்கள் மருத்துவ மாணவர்கள் பல்வேறு விதங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நிர்வாகம் இது குறித்து வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுகொண்டது.

இதனை ஏற்காத மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தை வலுவிழக்க செய்யும் விதமாக போராட்டத்தின் 8ஆம் நாள் மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டு மாணவர்களை அப்புறபடுத்த முற்பட்டனர். மாணவர்கள் எங்களுக்கு முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 9ஆம் நாளான வியாழக்கிழமை 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை ரத்தம் கொடுக்கும் போராட்டமாக அறிவித்து ரத்தம் கொடுக்க ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். மாணவர்களின் இரத்த தானத்தை பெற்றுகொள்ள மருத்துவகல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சென்று இரத்த தானம் செய்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏழை நோயாளிகளிடம் 1யூனிட் ரத்தம் ரூ500க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நோயாளிகளிடம் பல்வேறு விதங்களில் பணம் வசூல் செய்கிறார்கள். எங்கள் இரத்தத்தை ஏழைநோயாளிக்கு தானமாக கொடுங்கள் என்று தான் ரத்ததான போராட்டம் செய்தோம் அதனை நிர்வாகம் ஏற்கவில்லை. சரியான தீர்வு வரும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்கிறார்கள்.

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்