Skip to main content

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக...

Published on 23/03/2019 | Edited on 24/03/2019

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.

 

ELECTION

 

ஆனால் மதிமுக தனது சின்னமான பம்பரம் சின்னம் இல்லை என்ற நிலையில்  வேறொரு சுயேட்சை சின்னத்தில் நின்று சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவது அக்கட்சியினரே விரும்பவில்லை மேலும் சுயேட்சை சின்னம் என்பது அதிமுகவிற்கு சாதகமாக அமையும் என திமுக மூத்த நிர்வாகிகள் திமுக தலைமைக்கும் ம. தி.மு.க. தலைமைக்கும் கூறினார்கள்.

 

இதன் தொடர்ச்சியாக நக்கீரனில் நாம் மதிமுக சுயேச்சை .சின்னத்தில் நின்றால் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று செய்தி வெளியிட்டோம்,  இதையெல்லாம் தொடர்ந்து இன்று இரவு மதிமுக நிர்வாகிகள் கட்சி தலைமையுடன் பேசி உதயசூரியன் சின்னத்தில் தான் ஈரோட்டில் போட்டியிட வேண்டும் என்று பேசினார்கள்.

 

வெற்றிதான் முக்கியம் என்ற நிலையில் ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நிற்பதாக முடிவு செய்து, இன்று இரவு அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

 

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி நிற்பதால் எதிர் கட்சியான அதிமுக கலக்கத்தில் உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்