புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் செங்கொடியேற்றி மேதின விழா கொண்டாடப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மூத்த தோழர், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜியாவுதீன் கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், துணைத் தலைவர் ஆர்.சோலையப்பன், கணேஷ், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிளைகளிலும் செங்கொடியேற்றி இனிப்பு வழங்கி மேதினவிழா கொண்டாடப்பட்டது. இதேபோல சிஐடியு இணைப்புச் சங்கங்களான கட்டுமானம், முறைசாரா, ஆட்டோ, தையல், கூட்டுறவு, பஞ்சாலை, அனைத்துப் போக்குவரத்து, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பிலும் சிஐடியு கொடியேற்றி மேதின விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாலையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களில் சார்பில் மேதினப் பேரணியும், சின்னப்பா பூங்கா அருகில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வீ.சிங்கமுத்து முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வே.துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, துணைத் தலைவர் ப.சண்முகம், எம்.ஜியாவுதீன், எஸ்.பாலசுப்பிரமணியன், வி.அரசுமுகம், கு.செல்வராஜ், பொருளாளர் சி.அடைக்கலசாமி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், துணைச் செயலாளர் த.செங்கோடன் உள்ளிட்டோர் பேசினர்.