சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வேகமாகப் பரவி வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த இந்த 4 மாவட்டங்களிலும் நேற்று (19.06.2020) முதல் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் 2 கி.மீ க்கு உள்ளாகவே தங்களது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால், சென்னை முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி முடங்கிப் போனது. மெரினா கடற்கரை ஒட்டிய காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்ததால் அப்பகுதி கலையிழந்து காணப்பட்டது.