சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளார் வைகோ பேசுகையில்,
நாங்கள் தமிழில் எழுதுகிறோம் என்று சொல்லி, தமிழில் ஒரு பாடத்தை தேர்ந்தெடுக்கிறோம் என்று சொல்லி, அவர்களுக்கு அதிகம் மதிப்பெண் போட்டு வடமாநிலங்களில் இருந்து தேர்வாகி இங்கே வந்து வேலை செய்கிறார்கள் என்றால், ஏற்கனவே இங்கே 80 லட்சம் பேர் வேலையில்லா திண்டாட்டத்தால் அவதிப்படுகின்ற நிலைமை உள்ளது.
நீட் தேர்வு குறித்து நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது. பெண்களுடைய துப்பட்டாவை பறிப்பது. அவர்களது தோடு, நகை, கம்மல் போன்றவற்றை எடுப்பது. அதைவிட கொடுமை என்னெவென்றால் முழுக்கை சட்டையை அந்த இடத்திலேயே சட்டையை கத்தரிப்பது. அதைப்போல பெண்கள் அணிந்து வரும் துப்பட்டாவை எடுக்கும் பொழுது அந்த மாணவப் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், குடிமை தேர்வுகளுக்கு, சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்கு இந்த முறை பின்பற்றப்படுகிறதா? இது மிகக் கொடுமை, மனிதாபிமானமற்ற தன்மை. எனவே நீட் தேர்வில் மாணவ, மாணவிகளை சோதனைக்கு உட்படுத்தியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வுக்கு செல்லும் மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என பழைய கல்லூரி மாணவனாக யோசித்து பார்க்கிறேன். கவலையோடு, பதற்றத்தோடு தேர்வு மையத்துக்குள் சென்றால் எப்படி எழுத முடியும். தேர்வு மையத்திற்கு சென்றால் உற்சாகம் வர வேண்டும். ஆனால் அந்த உற்சாகத்தை இன்று இல்லமால் ஆக்கிவிட்டார்களே.
மாணவர்களை நடத்திய விதம் மனிதாபிமானமற்றது அதற்கு என கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கூறினார்.