Skip to main content

‘மாண்டஸ்’ முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

'Mandus' warning: Holidays for schools and colleges in 8 districts

 

மாண்டஸ் புயல் காரணமாக  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு  8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 500 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 550 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வந்த நிலையில் தற்பொழுது புயல் நகரும் வேகம் 11 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் கடல் வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும்பொழுது மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை (9/12/22) 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்