Skip to main content

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பள்ளி மாணவ- மாணவிகள் செந்துறையில் சாலைமறியல்!

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பள்ளி மாணவ- மாணவிகள் செந்துறையில் சாலைமறியல்!

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவின்  தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்ததும், வெளியில் வந்து சைக்கிளை சாலையின் குறுக்கே நிறுத்தி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை போலீசார் மாணவர்களை கலைத்தனர். இதனால், அங்கே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
அதே போன்று குழுமூரில் ஊடகங்களில் செய்தி வரவில்லை என்று கூறி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மணிமொழி மற்றும் சதீஸ்குமார் என்பவர்கள் செல்போன் டவரில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரியலூர் கலெக்டர் காலையில் வரவில்லை என்பதால் டவரில் ஏறி போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். அதன்பின்னர் கிராம மக்கள் சமாதானம் பேசி இறக்கிவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

- எஸ்.பி.சேகர்

சார்ந்த செய்திகள்