Skip to main content

13 வயது சிறுமியிடம் எக்குத்தப்பான கேள்வி; போக்சோவில் சிக்கிய இளைஞர்!

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

man arrested under pocso near salem

 

சேலத்தில், 13 வயது சிறுமியிடம் முதலிரவு குறித்து எக்குத்தப்பான கேள்விகளைக் கேட்ட இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

சேலம் ஐயந்திருமாளிகையைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் ஆனந்த் (23). இவர் 8 ஆம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை தினமும் பின்தொடர்ந்து வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை பாதி வழியில் வழிமறித்த ஆனந்த், தனது அலைபேசி எண்ணைக் கொடுத்து, தினமும் எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வேண்டும். இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியாது என்று மிரட்டியுள்ளார். 

 

இதனால் அரண்டு போன அந்தச் சிறுமி, தனது தந்தையின் அலைபேசியில் இருந்து ஆனந்திடம் பேசியிருக்கிறார். அப்போது அவர் ஆபாசமாகப் பேசியதோடு, திடீரென்று, முதலிரவு குறித்தும் மோசமாக கேட்டுள்ளார். ஆனந்தின் எக்குத்தப்பான கேள்விகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, இதுகுறித்து தனது தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை, சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

காவல் ஆய்வாளர் கஸ்தூரி, சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக ஆனந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்