Published on 03/06/2021 | Edited on 03/06/2021

மதுரை மாநகராட்சி இன்று (03/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மதுரை மாவட்டம், தத்தனேரி, மூலக்கரை மின் மயானங்களில் கரோனா சடலங்களை எரிக்க நாளை (04/06/2021) முதல் கட்டணம் இல்லை. ஜூலை 3ஆம் தேதி வரை கரோனா சடலங்களை எரிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை. கரோனா சடலங்களை எரிப்பதற்கான கட்டணத்தை சில தனியார் அமைப்புகள் செலுத்தும். கரோனா சடலங்களை எரிப்பதற்கு கட்டணம் கேட்டால் 842 842 5000 என்ற எண்ணில் புகார் தரலாம்". இவ்வாறு மாநகராட்சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.