Published on 01/07/2019 | Edited on 01/07/2019
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் படிக்கும் 500 மாணவர்களிடம் 25 ஆயிரம் முதல் 25 இலட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதாக புகாரளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் பெற்றது உறுதியானது. அதைத்தொடர்ந்து மூன்று அதிகாரிகள் மீது லஞ்சஒழிப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இது அந்தப்பகுதியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.