Published on 19/06/2021 | Edited on 19/06/2021

திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதையடுத்து, நிலம் கையகப்படுத்துவதில் தொடர்ந்து பல சிக்கல்கள் எழுந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட இந்த ஆவணத்தை முழுமையாக சேகரித்து மத்திய ராணுவ அமைச்சரின் ஒப்புதல் பெறுவதற்காக இன்று டெல்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.
அவர் மத்திய அமைச்சருடன் பேசுகையில் திருச்சியில் ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணிக்கு உரிய பாதுகாப்பு துறைக்குச் சொந்தமான இடத்தை விரைவில் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து மேம்பால பணியை விரைந்து முடித்திட ஆவண செய்யுமாறு நேரில் மனு அளித்தார். விரைவில் பணி முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.