ஊட்டி நகராட்சி வியாபாரிகள், மற்றும் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் அந்த பகுதிகளில் கள்ள நோட்டு புழங்குவதாக ஊட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட பீ 1 காவல்நிலைய போலீசார் குன்னூர் பகுதிகளிலும் இதே புகார் இருப்பதை அறிந்தனர்.
தொடர்ந்து குன்னூரில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் குன்னூர் கேஷ்பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கடந்த 2 நாட்களாக தங்கியிருந்த கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் ராஜ் (28) என்பவர் அறையை காலிசெய்து சென்றுள்ள தகவலறிந்து அவரை தேடியபோது மேட்டுபாளையம் செல்லும் சாலையில் பிடிபட்டார். அவரை ஊட்டி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவரிடமிருந்த இருபத்து ஆறாயிரம் மதிப்புள்ள பதிமூன்று 2 ஆயிரம் ரூபாய், ஒன்பதாயிரம் மதிப்புள்ள 18 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரனை நடத்திய பீ 1 காவல்நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் போலீசார் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.