இந்தியாவில் முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளில் ஒன்றான "டைம்ஸ் நவ்" (TIMES NOW) இந்தியா முழுவதிலும் மக்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியீட்டது. இதில் மத்தியில் பாஜக கூட்டணி 283 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என தெரிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்கள் மாற்றியமைப்படலாம் என தெரிகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் நடத்திய மக்களவை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பின் முடிவை வெளியீட்டது. இதில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் அதிமுக கூட்டணி -5 தொகுதிகளும் திமுக கூட்டணி - 34 தொகுதிகளை கைப்பெற்றும் என தெரிவித்தது.
இதனால் திமுக கூட்டணி கட்சிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஆளும் அதிமுக கட்சிக்கு இந்த கருத்து கணிப்பு மிகுந்த கவலையைத் தந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அதிமுக கட்சியின் தலைவர்கள் தேர்தலில் புதிய பிரச்சார வியூகத்தை கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கருத்து கணிப்பு முடிவால் அதிமுக கூட்டணி கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனவே தமிழக பிரச்சார களத்தில் இனி அனல் பறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் அதிமுகவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நாளில் இருந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள் கட்சியின் மீது அதிருப்தி தெரிவித்து விலகி வருவது குறிப்பிடத்தக்கது.
பி. சந்தோஷ் , சேலம்