Published on 17/05/2020 | Edited on 17/05/2020

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி நேற்று தமிழகம் முழுவதும் (சென்னை,திருவள்ளூரை தவிர) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று வேலூரில் டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.