Skip to main content

20 அம்ச கோரிக்கைகளுடன் நூலகர்கள் முறையீடு போராட்டம்

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

 

 

கிராமப்புற மற்றும் பேரூராட்சி பகுதி நூலகங்கள் தரம் உயர்த்த வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் சார்பில் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் முறையீடு போராட்டம் நடத்தப்பட்டது.

 

கோரிக்கைகளாவன, 1. 15 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களின் பணியிடங்களை மேம்படுத்தி ஊட்டுப் பதவியாக அறிவித்து காலிப் பணியிடங்களில் 3ஆம் நிலை நூலகர்களாக வரையறுக்கப்பட்ட பணியும், ஊதியமும் வழங்க வேண்டும்.

2. வட்டார முழுநேர கிளை நூலகங்களை முதல்நிலையாகவும், பேரூராட்சிப் பகுதியில் உள்ள கிளை நூலகங்களை 2-ஆம் நிலை நூலகங்களாகவும் தரம் உயர்த்த வேண்டும். 

3 நூலகர்களுக்கு தொழில்நுட்ப பணியாளர்ளுக்கான ஊதியம் வழங்க வேண்டும்.

4.25-30 ஆண்டுகளாகப் பணிபுரியும் பகுதிநேரத் தூய்மைப் பணியாளர்கள், பகுதிநேர நூலகர்களின் பணியிடங்களை மேம்படுத்தி வரையறுக்கப்பட்ட பணியும், ஊதியமும் வழங்க வேண்டும்.

5. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் அமைய இருக்கும் கலைஞர் நூலகப் பணியிடங்களைப் பொது நூலகத்துறையின் ஒரே அலகாகக்கொண்டு மாவட்டங்களில் பணி புரியும் நூலகர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும்.

6. நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள நிரந்தர பொது நூலக இயக்குநர் பணியிடத்தை பொது

நூலகத்துறையில் இருந்து பதவி உயர்வு வழியாக நிரப்ப வேண்டும்.

7. நூலக நிதி சில்லரைச் செலவில் பிடித்தங்களின்றி பணிபுரிந்து ஓய்வுபெற்ற (ம) மரணம் அடைந்த நூலகர்களுக்கு, சிறப்பு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 

8. ஆன்லைன் வருகை, சர்வே பதிவுகளுக்குத் தேவையான வசதிகள்செய்து அளிக்கவேண்டும்.

9. புதுக்கோட்டை மாவட்டத்தில் தர ஊதியத்திற்கு இணையான நிலை ஊதியம் அரசின் தக்க தெளிவுரைகளுடன் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

10. 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரை அரசாணை எண்:303/ஊபி/11.10.2017-ன்படிபகுதிநேர தூய்மைப் பணியாளர்களுக்கு நிலுவைத் தொகையும், பகுதிநேர நூலகர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும்.

11. வட்டார மற்றும் முழுநேர நூலகங்களில் பல்வேறு பிரிவுகள் செயல்படுவதால் தினக்கூலிப் பணியாளர்களைக் குறைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து வழங்கவேண்டும். 

12. நூலகங்களில் காலியாக உள்ள சார்நிலைப் பணி மற்றும் அமைச்சுப் பணியிடங்களை காலதாமதம் இன்றி பதவி உயர்வு வழியாக முழுமையாக நிரப்ப வேண்டும். 

13. அனைத்து கிளை ஊர்ப்புற நூலகங்களுக்கும் ஒரே சீராக வேலைநேரம் 10.00 முதல் 5.00 மணிவரை மாற்றம் செய்து நடைமுறைகப்படுத்த வேண்டும். 

14. நூலக சட்டவிதிகள் திருத்த உயர்நிலைக்குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும். 

15. புதியதாக ஏற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட நூலக அலுவலகம், மைய நூலகம் ஏற்படுத்தி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். 

16. கிளை நூலகங்களில் அலுவலக உதவியாளர், ஆவண எழுத்தர்களாகப் பணிபுரிந்து காலி ஏற்பட்ட பணியிடங்களை 3-ஆம் நிலை நூலகர் பணியிடமாக மாற்றம் செய்து நிரப்ப வேண்டும்.

17. நூலகர்களின் பணிமூப்பு பட்டியல்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், முரண்பாடுகளைக் களைந்து திருத்திய பட்டியல் வெளியிட வேண்டும். 

18. 3 ஆண்டுகளுக்கு மேல் பல்லாண்டு காலமாக ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் மாவட்ட நூலக அலுவலர், கண்கானிப்பாளர்களுக்கு பணியிடமாறுதல் வழங்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்