கஜா புயல் காரணமாக 22 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தேனி, திருவண்ணாமலை, மதுரை, கரூர், திண்டுக்கல், சிவகங்கை,திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
![Announcements Announcements Canceling the exams !!](http://image.nakkheeran.in/cdn/farfuture/2sjxdMKDnUSH-A3UtRycnXoZlcJevjGSa2PnEsLBoQs/1542355304/sites/default/files/inline-images/GHGH_0.jpg)
அதேபோல் தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு ,கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விழா காரணமாக நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் மற்றும் கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த பெரியார் பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலு அறிவித்துள்ளார். மற்றும் ரத்து செய்யப்பட்ட இந்தத் தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.