Skip to main content

பாலியல் வல்லுறவு.. வழக்கறிஞர் மீது வழக்கறிஞர் புகார்!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

     "திருமணம் செய்வதாகக் கூறி மயக்கநிலையில் இருந்த என்னைக் கற்பழித்து பாலியல் வல்லுறவு செய்து, கொலை மிரட்டல் விடும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை வேண்டும்" என நெல்லை காவல்துறை மாநகர ஆணையரிடம் புகாரளித்துள்ளார் இ.பி.காலணியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சீதாலட்சுமி.

 

l

 

   " எட்டு ஆண்டுகளாக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் நான் 2016ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாககுழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். அக்காலக்கட்டத்தில் அதே சங்கத்தின் செயலாளராக இருந்தவர் தற்பொழுது மாவட்ட 1வது நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் ராஜேஷ்வரன். ஒரே சங்கம் என்பதால் அவருடன் நண்பராக நெருங்கிப் பழகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர் குடியிருந்து வரும் மகாராஜா நகர்  எம்.கே.எம்.அபார்ட்மெண்டிற்கு அடிக்கடி செல்லும் சூழல் ஏற்பட்டது. 

 


2017ம் ஆண்டு வழக்கறிஞர் சங்கத் தேர்தலின் பொழுது அவர் தலைவராகப் போட்டியிட்டு தோல்வியடைந்து, வெளியில் வராமல் வீட்டிலே இருந்து விட்டார். அந்த தருணத்தில் ஆறுதல் கூற சென்ற என்னிடம், " எனக்கு 40 வயது தான் ஆகின்றது. உன்னை திருமணம் செய்கிறேன்." என ஆசை வார்த்தைக் காட்டினார். பிறகு ஒரு நாள், "நம்முடைய திருமணத்தைப் பற்றி அம்மா பேச நினைக்கின்றார்" என என்னை அவருடைய வாகனமான TN72 AS 1216 சுவிப்ட் டிசையரில் யாருமில்லாத அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, குளிர்பானம் கொடுத்து மயக்க நிலையில் இருந்த என்னை பாலியல் வல்லுறவு செய்தார். அதனால் நான் கர்ப்பமடைந்தேன். இது தெரிந்த அவர் " கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன்." என என்னை ஏமாற்றி கோவில்பட்டி கமலா மாரியம்மாள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவைக் கலைத்தார். அதன் பின் எப்பொழுதுக் கேட்டாலும் என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி வந்தவர்,  இப்பொழுது ஆட்களைக் கொண்டு மிரட்டி வருகின்றார். ஆகவே மயக்க நிலையிலிருந்த என்னை பாலியல் வல்லுறவு செய்து மிரட்டல் விடும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்கின்றது பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் சீதாலெட்சுமியின் புகார் மனு. இது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்