Published on 04/06/2021 | Edited on 04/06/2021
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12ஆம் தேதி திறக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
68 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில், இது தொடர்பாக ஆலோசனையும் நடைபெற்றது. கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டுள்ளன. 647 பகுதிகளில் மொத்தம் 4,061 கிலோமீட்டர் நீளம்கொண்ட நீர்வழிப் பாதைகள் தூர்வாரப்பட்டுவருகின்றன.