Published on 30/07/2022 | Edited on 30/07/2022
மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் சர்வே நம்பரை மாற்ற, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலக நில அளவையரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து நில அளவையர் முத்துப்பாண்டி, ரமேஷிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரமேஷ், மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை தெற்கு தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் முத்துப்பாண்டியிடம் ரமேஷ் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முத்துப்பாண்டியை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.