Skip to main content

8 வழிச்சாலைக்கு நிலம் அபகரிப்பு: விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
sekar


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர். இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம், கிணறு உள்ளது.
 

அந்த நிலத்தின் ஒருபகுதி மற்றும் வீடு போன்றவைகளை எட்டு வழிச்சாலைக்காக அரசு கையகப்படுத்தி அளவுக்கல் நடப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக மன உளச்சலில் இருந்த சேகர் ஞாயிற்றுக்கிழமை இரவாகியும் வீட்டுக்கு வரவில்லை.
 

 

 

இவரை தேடிச்சென்ற குடும்பத்தார் மற்றும்  உறவினர்கள் நிலத்தில் மயங்கி கிடந்தத சேகரைப்பார்த்துவிட்டு அதிர்ச்சியாகிப்போய் ஓடிச்சென்று அருகில் பார்த்தபோது பூச்சிமருந்து குடித்து சேகர் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினரும், உறவினர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். 
 

 

 

இந்த தகவல் கிடைத்ததும் செங்கம் போலிஸார் சம்பவயிடத்துக்கு விரைந்து சென்றனர். உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலையால் விவசாய் சங்கங்கள் மூலமாக வேறு பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது என அப்பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைத் தேனீக்கள் கொட்டி விவசாயி உயிரிழப்பு!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Farmer incident by mountain bees

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வாரப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். விவசாயியான இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சொந்த பணி காரணமாக காப்பிலியபட்டிக்கு வருகை தந்துள்ளார். பின்னர் தனது பணிகளை முடித்துக் கொண்டு கல்வாரப்பட்டிக்கு திருப்பிக் கொண்டிருந்துள்ளார்.

இவர் மா.மு. கோவிலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் இருந்த தேன் கூடு கலைந்து ஏராளமான மலைத் தேனீக்கள் வெளியேறியுள்ளன. இந்த தேனீக்கள் சாலையில் சென்று கொண்டிருந்த விவசாயி காளியப்பனை கொட்டியுள்ளன. இதனால் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவ்வழியே சாலையில் சென்று கொண்டிருந்தவர்களையும் தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால் 8க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலூகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மலை தேனீக்கள் கொட்டியதில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீடியோ காலில் மனைவி; துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட வாலிபர்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

A teenager passed away for extramarital affair in uttar pradesh

 

உத்தர பிரதேசம் மாநிலம், பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜமுனா கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு (30). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லாவண்யா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சோனு கடந்த 9 மாதங்களாக ஒரு இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. 

 

இதனையடுத்து, கணவரின் உறவை தெரிந்து கொண்ட லாவண்யா சோனுவை பலமுறை கண்டித்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சோனுவின் குடும்பத்தினர் முதற்கொண்டு சோனுவை கண்டித்துள்ளனர். ஆனால், சோனுவின் மறைமுக உறவு நீடித்துக் கொண்டே தான் இருந்துள்ளது. இதனால், சோனுவுக்கும் லாவண்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று முன் தினம் சோனு, தனது காதலியுடன் ஊர் சுற்றிப் பார்க்க ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சோனுவை அவரது மனைவி லாவண்யா செல்போன் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டிருக்கிறார். வீடியோ காலை எடுத்த பின்பு சோனுவின் காரில் அந்த இளம்பெண் இருப்பதை பார்த்த லாவண்யா அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், சோனுவுக்கும் லாவண்யாவுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சோனு, தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டார். 

 

இதில் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த அந்த இளம்பெண், அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த சிலர், சோனுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சோனுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சோனு வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.