வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாமணி மனைவி 55 வயது சரஸ்வதி. இவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் சரஸ்வதி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். செப்டம்பர் 13ந்தேதி இரவு வழக்கம்போல் மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுள்ளார்.

இன்று செப்டம்பர் 14ந்தேதி காலை 9 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், பத்து பட்டு புடவைகள், 2 வெள்ளி கிண்ணம், மற்றும் 2 வெள்ளி குத்துவிளக்குகள், மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தள்ளார்.
இதுக்குறித்து சரஸ்வதி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்க்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கிராமிய போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் சரஸ்வதியிடம் புகார் எழுதி வாங்கினர். அதன்பின்னர் தடய அறிவியல் துறையினர் அங்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்து எடுத்துக்கொண்டனர். போலிஸார் திருடிய அந்த திருடன்களை தேடி வருகின்றனர்.

வாணியம்பாடி நகரில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்திவருபவர் சதிஷ். செப்டம்பர் 13ந்தேதி இரவு 8.30 மணிக்கு சிறுநீர் கழிக்க சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது கடையின் கல்லா பெட்டியில் இருந்த பணம் 10 ஆயிரம் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். கடையில் பாதுகாப்பாக பொருத்திவைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, கடையில் யாரும்மில்லை என தெரிந்துக்கொண்டு 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் கடையில் கல்லாவை திறந்து அதிலிருந்த பணம் 10 ஆயிரத்தை திருடி செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை எடுத்துச்சென்று காவல்நிலையத்தில் புகார் தர, அக்கம் பக்கம் கடைகள் இருக்கும் நிலையில், சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ளபோதே தைரியமாக அந்த சிறுவன் திருடிச்சென்று போலிஸாரை அதிரவைத்தது. வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை போலிஸார் தேடிவருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் திருடுகள் தொடர்ச்சியாக நடந்துவருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.