நாகர்கோவிலில் ஜெ.தீபா பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் தரவிருப்பதாக ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் குவிக்கப்பட்டனர்.
இந்த பொதுகூட்டதத்தில் கலந்து கொண்ட ஜெ.தீபா பேரவையின் தலைவர் ஜெ.தீபா பொதுக்கூட்டத்தின் முடிவில் ஐந்து நபர்களுக்கு புடவைகள் போன்ற உதவிகள் வழங்கிவிட்டு சென்றதாகவும் கூடியிருந்தோருக்கு பின்னர் பேரவையின் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குவார்கள் எனவும் கூறப்பட்டது.
ஆனால் இறுதியில் காத்திருந்த பெண்களுக்கு அவ்வாறு நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படாமல் இடத்தை காலிசெய்ய முயன்ற பேரவை நிர்வாகிகளுடன் பொதுமக்கள் ஆத்திரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் அந்த கூட்டத்திற்கு மேடையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக வரவழைக்கப்பட்டிருந்த நாடகக் கலைஞர்களுக்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் உரியத்தொகை தராததால் ஊருக்கு செல்ல வழியின்றி சரியான உணவின்றி தவித்ததாகவும் நாடகக் கலைஞர்கள் குற்றம்சாட்டினர் .