Skip to main content

கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நீர்மட்டம் உயர்வு..!

Published on 03/11/2017 | Edited on 03/11/2017
கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர்
வழங்கும் ஏரிகள் நீர்மட்டம் உயர்வு ..!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அத்துடன் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், சில இடங்களில் வெள்ளங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் பலத்த மழை காரணமாக தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன. செம்பாக்கம் பெரிய ஏரி நிரம்பியதால் ஆக்கிரமிப்பாளர்களால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் ஏரிகளும் நிரம்பியுள்ளன.

கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் போரூர் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.    

சார்ந்த செய்திகள்