Skip to main content

கோடநாடு வீடியோ விவகாரம் சிபிஐ விசாரிக்க டிராஃபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு

Published on 14/01/2019 | Edited on 14/01/2019

 

tt

 

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கோடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டிராஃபிக் ராமசாமி சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கோடநாடு வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதால் தமிழக காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் அதில் நியாயம் கிடைக்காது என்றும் அதனால் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அவர் எழுப்பிய குரலும், சிந்தனைகளும் நம்மிடையே விதைக்கப்பட்டிருக்கிறது" - நடிகர் ஆரி உருக்கம்!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

bsgsbsd

 

பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்று வந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் 'பிக்பாஸ் 4' புகழ் ஆரி அர்ஜுனன் மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

"தன் தேவைக்காக அல்லாமல் மக்களின் தேவைக்காக குரல் எழுப்பிய மனிதன் டிராபிக் ராமசாமி அவர்கள். பூத உடல் மறைந்து போகலாம். ஆனால் அவர் எழுப்பிய குரலும், அவர் எழுப்பிய சிந்தனைகளும் நம்மிடையே விதைக்கப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார்.

 

 

Next Story

"இவருடன் சேர்ந்து நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன்" - நடிகர் சௌந்தர ராஜா கவலை!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

bgbdfsbsx

 

பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்றுவந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் சௌந்தர ராஜா மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

"பல சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த மாமனிதர் ட்ராஃபிக் ராமசாமி ஐயா அவர்கள் இன்று இயற்கை எய்தினார். சமூக நலனுக்காக போராடுவதில் இவர் ஒரு முன் மாதிரி. இவருடன் சேர்ந்து நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்து இருக்கிறேன். உங்கள் ஆத்மா இறைவனடி சேரட்டும் ஐயா" என கூறியுள்ளார்.