அகில இந்தியா இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்று அழைக்கப்படும் ஸ்ரீகண்டன் மீது அவரது அமைப்பின் மகளிர் அணியில் மாநிலச் செயலாளர் பதவி வகித்த பெண் நிர்வாகி, சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்திருந்தார். அதன் பேரில் சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் கோடம்பாக்கம் ஸ்ரீ தலைமறைவானார். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
டில்லியில் உள்ள அமித்ஷா, நிதின்கட்கரி, ராஜ்நாத்சிங் என முக்கிய புள்ளிகளுடன் புகைப்படம் எடுத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளதுபோல காட்டி கொண்டு, மத்திய பெட்ரோல்த்துறை அமைச்சரை எனக்கு தெரியும் என்று இன்டியன் கேஸ் ஏஜெண்ட் வேலை வாங்கி தருவதாக கூறி கோயம்பத்தூரை சேர்ந்த கெளதமன் என்பவரை 20 லட்சம் ஏமாற்றியுள்ளார்.
அதோடு நின்றுவிடாமல் இலங்கையில் தேடப்பட்ட ஒரு குற்றவாளியை பூந்தமல்லியில் கைது செய்தனர். அவருக்கு நெருக்கமான சுரேஷ் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் அந்த சுரேஷ் மூலமாகாத்தான் பல பின்புல பிஸ்னஸ் செய்துவந்துள்ளார் ஸ்ரீ.
இலங்கையில் இருந்து கப்பல் மூலமாகவும், ஏர்போர்ட் மூலமாகவும், பவுடர், பிரவுன் சுகர், கோக்கைன், ஹெராயன் போன்ற போதை பொருட்களை எடுத்துவந்து முதல் கட்டமாக ஸ்ரீபெரும்புத்தூர், சுங்கவார்சத்திரம் எனும் இடத்தில் இருந்து சென்னை முழுக்க கல்லூரி மாணவர்கள் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு குன்றத்தூர், ஐயப்பந்தாங்கல் என இடங்களை மாற்றி தனது பணியை சிறப்பாக செய்துவந்துள்ளார்.
இதன் இடையில் சுரேஷ் இலங்கை வாழ் மக்களை குடியுரிமை பெற்று தருவதாக ஸ்ரீயிடம் அழைத்து வந்து, அமித்ஷாவுடன் நெருக்கமான தொடர்புடையவர் என்று கூறி கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுள்ளார். இதில் காவல்துறையே கண்டும் காணமல் இருக்கும் நிலையில் மேலும் அவரை பற்றி வழக்கு தொடுத்தவர்களை மேலும் மிரட்டி வருகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.