தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல் என இயங்கி வருகிறது.
இந்நிலையில், அவரக்குறிச்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் முருகனும், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பூவும் வேட்புமனு தாக்கல் செய்ய திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று, பின்னர் மனுதாக்கல் செய்தனர்.