கேரள முதல்வர் சாதனைக்கு மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியில்,
தலித் உள்ளிட்ட பிற சமூகத்தினரை திருவிதாங்கூர் தேவசம்போர்டில் அர்ச்சகர்களாக நியமித்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ள மாண்புமிகு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், ஆலயங்களில் சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்திய நீதி கட்சியின் வழித்தோன்றலான திராவிட முன்னேற்றக் கழகம், கேரள மாநிலத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தச் சாதனையைக் கொண்டாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.