Skip to main content

குற்றாலத்தில் டி.டி.வி. தினகரன் ரகசிய ஆலோசனை

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
Dinakaran


நெல்லையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திய டிடிவி தினகரன் இரவு குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் 16 பேரும் உடன் சென்றிருந்தனர். 

 

 

 

அவர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

 

 

 

மூன்றாவது நீதிபதியிடம் வழக்கு சென்றுள்ள நிலையில் அதனை எதிர்கொள்வது குறித்தும், தங்களது வழக்கறிஞர்கள் எடுத்துரைக்கும் வாதம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 18 எம்எல்ஏக்களின் எதிர்கால திட்டம், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் தனித்து களம் காண்பதா அல்லது கூட்டணி வைப்பதா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
 

சார்ந்த செய்திகள்