Skip to main content

இறப்பை பதிவு செய்ய ஆதார் காட்டாயம்!

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
இறப்பை பதிவு செய்ய  ஆதார் காட்டாயம்!

அக்டோபர் 1-ம் தேதி முதல் இறப்புச் சான்றிதழ் பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒருவர் இறந்து விடுகிறார், அவரது இறப்புச் சான்றிதழைப் பெற விரும்பும் நபர் இறந்தவரின் ஆதார் எண்ணை அளிப்பது அவசியம், இறந்தவர் பெயரில் ஆதார் எண் இல்லை என்றாலோ அல்லது ஆதார் விண்ணபித்த எண் இல்லை என்றாலோ இறந்தவரிடம் ஆதார் அட்டை இல்லை என்பதற்கான சான்றிதழை இறந்தவர் சார்பாக இறப்புச் சான்றிதழ் கோரும் நபர் சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதில் விண்ணப்பதாரர் ஏதாவது தவறான தகவல் அளித்தால் ஆதார் சட்டம், 2016-ன் படியும், பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம், 1969-ன் படியும் குற்றமாகக் கருதப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும் இதன் மூலம் அடையாள மோசடி சிறந்த முறையில் தடுக்கப்படும். மேலும் இறந்தவரின் அடையாளத்தையும் பதிவு செய்ய வசதியாக அமையும்” என்று
தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்