Skip to main content

கதிராமங்கலம் போராட்டம்: ஜெயராமன் தவிர்த்து 9 பேருக்கு ஜாமீன்..!

Published on 08/08/2017 | Edited on 08/08/2017
கதிராமங்கலம் போராட்டம்: ஜெயராமன்
தவிர்த்து 9 பேருக்கு ஜாமீன்..!


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஓ.என்.ஜி.சி. சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் பந்த நல்லூர் காவல் நிலையத்தில் ஓ.என்.ஜி.சி. மேலாளர் புகார் அளித்திருந்தார்.
 
இது தொடர்பாக, பந்தநல்லூர் போலீசார், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங்கட்ராமன் ஆகிய 10 பேரை கைது செய்தனர். அதை தொடர்ந்து 10 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று கைதான 10 பேரில் 9 பேருக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதில் பேராசிரியர் ஜெயராமனை தவிர மற்ற 9 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. 

சார்ந்த செய்திகள்