காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் தீவிரவாத தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேலூரில், வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிப்ரவரி 18-ஆம் தேதி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அமைப்பின் ஒன்றிய நகர பேரூர் அமைப்புகளின் நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது, கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தனது இல்லத்தில் கூட்டியிருந்தார் அங்கு பேசும் பொழுது நாடாளுமன்றத் தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும், தமிழகத்தில் 50 ஆண்டுகளாக கட்சியை நடத்தும் திமுக அதிமுக போன்ற கட்சிகள் வாழ்வா சாவா பிரச்சினை, அவர்கள் இதில் படு தீவிரமாக களம் இறங்குவார்கள். நாம் இப்போதுதான் அமைப்பை தொடங்கி உள்ளோம் நாம் அவர்களோடு போட்டி போடத் தேவையில்லை.
நம்முடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் நாம் அதில் முழு கவனத்தை செலுத்துவோம் எனக் கூறினார். தமது அமைப்பின் நிர்வாகிகள் அமைப்பில் உள்ளவர்கள் சமூகவலைதளங்களில் மன்றத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை, சீமான் அமைப்பினர் உட்பட வேறு சில அமைப்பினர் நம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்து விமர்சிக்கின்றனர். அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு நாம் முகம் கொடுக்க தேவையில்லை, பதில் சொல்ல தேவை இல்லை இதனை நம் மன்றத்தில் வலியுறுத்துங்கள் என்றார்.
அதேபோல் கட்சி நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நிர்வாகிகள் செலவு செய்து ஏற்பாடு செய்ய வேண்டாம் சில சிறு சிறு உதவிகளை செய்தாலே போதும், ஏன் எனில் நிர்வாகிகளுக்கு முதலில் அவர்களது குடும்பம் முக்கியம் அதை பார்க்க வேண்டும் பொதுமக்களுக்கு தேவையான சில சிறு சிறு உதவிகளை செய்ய வேண்டும், மக்களோடு மக்களாக பழக வேண்டும் அவர்களின் அனைத்து சுக துக்கங்களில் கலந்து கொள்ள வேண்டும், கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெற்றால் அதில் நாம் சென்று கலந்து கொள்ள வேண்டும், அனைத்து கட்சிகளுடன் நாம் ஒரு நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், நம் மக்கள் மன்றத்தை பார்க்கும் பொது மக்கள் இவர்கள் நல்லவர்கள் என பேசவேண்டும், வீண் விவகாரங்களில் தலையிடக் கூடாது என வலியுறுத்தியது பற்றி கீழ் மட்டத்திலுள்ள நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்திநார்.
இந்தக் கூட்டத்தில் சிலர் கட்சி தொடஙகி தேர்தலில் போட்டியிடலாம் எனச்சொல்லி அமைப்பை தொடங்கிய தலைவர் பின்னர் பின் வாங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார்கள்.
நம்முடைய இலக்கு சட்டமன்றத் தேர்தல் தான் என சொல்லி உள்ளார் தலைவர். சட்டமன்றத் தேர்தலில் பொட்டியிட அமைப்பை தயார் படுத்த சொல்லியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ஒரு பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்படும் அந்த அரசியல் மாற்றத்தை நாம் கையில் எடுத்துக்கொண்டு நாம் களத்தில் இறங்குவோம் சட்டமன்றத் தேர்தலில் நம் பலத்தை காட்டுவோம் என கூறியுள்ளார் என பதிலளித்துள்ளார்.